Corono Heros Of India - tamilpowerpoint

Post Top Ad

Your Ad Spot

Saturday, April 17, 2021

Corono Heros Of India

 This is a short essay about corono heroes, who work 24 hours againsed the covid 19 pandemic 

 கோரோனோ கால கதாநாயகர்கள் கட்டுரை :- கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2020 ம் ஆண்டு கோரோனோ பெரும்தோற்று காரணமாக உலக நாடுகள் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டது. கோரோனோ தொற்று கால கட்டங்களில் எத்தனையோ தன்னலமில்லா கதாநாயகர்கள் சிறப்பான உழைப்பை கொடுத்துள்ளனர், சமூக மணியாளர்கள் ,மருத்துவர்கள் ,செவிலியர்கள் , காவலர்கள் என இந்த பட்டியல் பெரியதாகும்.இந்த உன்னதமான கதாநாயகர்கள் பற்றிய கட்டுரை இங்கே கொடுக்க பட்டுள்ளது.

corona kala kathanayakarkal tamil katturai

உலகம் முழுவுதும் எட்டு கோடிக்கும் அதிகமானார்கள் இந்த பெரும் தொற்றின் காரணமாக பாதிக்க பட்டனர். ஒரு கோடியே எழுபது லட்சத்திற்கும் அதிகமான கோரோனோ தொற்று ஏற்பட்டவர்கள் மரணம் எய்தினார்.இப்படிப்பட்ட கொடிய காலகட்டத்தில் உலகம் முழுவதும் எத்தனையோ சமூக பொறுப்புடைய கதாநாயகர்கள் உருவானார்கள். கோரோனோ தொற்றிக்கு எதிராக மனிதன் எடுத்த போருக்கு தலைமை தங்கியோர் பலர், குறிப்பாக இந்த போரில் ஈடுபட்டவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்தது மிகவும் சிறப்பம்சம் வாய்ந்ததாகும்.

புதிய வகையான போர்வீரர்களை உலகம் கண்டுகொண்டது என்று கூட சொல்லலாம்.தான் குடும்பத்தை பிரிந்து இந்த போரில் ஈடுபட்டவர்கள் ஏராளம். முன்னிலை தொழிலார்கள் எனப்படும் துப்புரவு தொழிலார்கள் , செவிலியர்கள் போன்றோர் தங்கள் உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்தே இந்த போரில் ஈடுபட்டனர்.

மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள்

உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி மூன்று லட்சத்திற்கும் அதிகமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இந்த நோயினால் பதிப்படைந்தார் என்பாதை நாம் அறிவோம். கோரோனோ தொற்று ஆரம்பித்த காலகட்டங்களில் அதிகப்படியான விழிப்புணர்வு இல்லாத காரணம் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை அவர்களை பாதிப்படைய செய்தது. பெரும் பொருளாதார சரிவுகளை கண்டா உலக தேசங்கள் மருத்துவர்களின் பாதுகாப்பிற்கு உதவ முடியாத நிலையினும் அவர்கள் கதாநாயகர்களாக மின்னினர்

துப்புரவு தொழிலார்கள்

அன்றாட பணிகளை துரிதமாக செய்யவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் இருப்பவர்கள் துப்புரவு தொழிலார்கள். மருத்துவர்களுக்கு அடுத்த படியாக இவர்கள்தான் அதிகள் மனிதர்களிடம் பழகும் சூழ்நிலையில் உள்ளவர்கள்.இவர்களது சிறந்த சேவை உலகளவில் போற்றப்பட்டது. எங்கு காணினும் கோரோனோ தொற்றுடைய பொருட்கள் நிறைந்திருந்த காலகட்டங்களில் போதிய உபகரணங்கள் இன்றி கோரோனோ போரில் ஈடுபட்டனர்.

ரேஷன் ஊழியர்கள்

பல நாள்கள் நீடித்த கோரோனோ ஊரடங்கு காலகட்டத்தில் அரசு வழங்கிய மளிகை பொருட்களை பொதுமக்களிடையே இவர்கள் பாதுகாப்பாக கொண்டு சேர்த்தனர். இந்திய அரசு அறிவித்த பொது ஊரடங்கை அடுத்து வேலை ஏதுமின்றி பணத்தட்டு பாடு ஏற்பட்டு எங்கு சென்றாலும் பசி பட்டினி ஏற்பட்டது. இவர்களது துயரத்தை போக்கும் விதமாக அரசு விலையில்லா உணவு பொருட்களை ரேஷன் கடைகள் மூலமாக விநியோகம் செய்தது. போதுமான அளவு உணவு பொருட்களை வீடு தோறும் விநியோகம் செய்த ரேஷன் ஊழியர்களை அடுத்த கதாநாயகர்கள் என்றுரைப்பதில் தயக்கம் இல்லை.

காவலர்கள்

கோரோனோ கால ஊரடங்கை முதலில் சாதாரணமாக எடுத்து கொண்ட மக்களை தடுத்து நோயின் தீவிரத்தை புரியவைத்தனர் காவல் துறையினர். சில கடுமையான முறைகளில் மக்கள் கூடுவதற்கு தடை விதித்திட் காவலர்கள் 24 மணி நேரமும் வேலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தடுப்பு மருந்து எதுவும் இல்லாத கால கட்டத்தில் வெறும் முக கவசம் மட்டுமே பாதுகாப்பு என்று வேலை செய்தனர். வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்களை தொடந்து கண்காணித்து அவர்களை தடுத்தும் கோரோனோ சமூக பரவலாக மாறாமல் இருக்க காவல் துறையினர் இரவு பகலாக சாலை ஓரங்களில் உறங்கி கடமையாற்றியதை அனைவரும் பாராட்டினர்.

சமூக ஆர்வலர்கள்

பொது மக்கள் அதிகம் பொறுப்புடன் நடந்துகொள்ளவும், அவர்கள் விழிப்புணர்வு பெறவும் சமூக ஆர்வலர்களின் துணை தேவைப்பட்டது. அரசுடன் இணைந்து அவர்கள் செய்த பொது வேலைகள் மிகவும் பாராட்ட கூடியதாகும். பொது ஊரடங்கில் அதிகம் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது இந்த பிரச்சனைக்கு அதிக சமூக ஆர்வலர்கள் தங்கள் வீடுகள் மற்றும் தோழிகூடங்களில் இருந்து உணவு சமைத்து தேவைப்படும் இடங்களுக்கு கொண்டு சேர்த்தனர்.பெரும் தொற்று ஏற்படும் காலங்களில் அரசு அறிவுறுத்தும் சமூக கட்டுப்பாடுகளை அவர்கள் கடை பிடித்ததும் அனைவராலும் அவர்களை கதாநாயகர்களாக உயர்த்தியது

பொதுமக்கள்

தனி மனித ஒழுங்கும் என்பது ஒரு சமூகத்தின் பெரும் பலமாகும். மருந்து இல்லாத ஒரு நோய் பரவலாக பரவுவதை தடுக்க அரசு எடுத்த முதல் ஆயுதம்

  • முறையான சமூக இடைவெளி ,
  • எப்போதும் முக கவசம்
  • மூக்கு கண் வாயை தொடாதிருத்தல்
  • அடிக்கடி கை கழுவுதல்
  • தேவையில்லாமல் பொது இடத்திற்கு செல்லாதிருத்தல்

இந்த கட்டளைகளை கிட்ட தட்ட அனைவரும் கடைபிடித்ததன் காரணமாகவே இந்த பெரும் தொற்று கணக்கிட முடிந்த அளவிற்கு குறைய தொடங்கியது. ஒரு தேசத்தின் தூண்களாக இருக்கும் குடிமகன்கள் தங்கள் கடமைகள் அரசு அறிவுறுத்தலின்படி கடைபிடிப்பது அந்த அரசை உயர்த்துகிறது. அந்த வகையில் ஒவ்வொரு அரசு எடுக்கும் முயற்சிக்கும் ஒத்துழைப்பு கொடுத்த ஒவ்வொரு குடிமகனும் கதாநாயகர்கள் அவர்.

கோரோனோ தொற்றுக்கு தடுப்பு மருந்து வந்துவிட்ட இந்த களங்களில் கூட கோரோனோ தொற்றின் பாதிப்பு அதிகமாகவே உள்ளது, பிளேக், போலியோ பெரியம்மை போன்ற உயிர்கொள்ளி நோயை இல்லாமல் செய்யும் காலம் வரை அனைவரும் தங்களது அரசு ,சமூகம் விதிக்கும் நல்ல திட்டங்களுக்கு உட்பட வேண்டும்.அவ்வாறு செயல்படுவதில் மூலம் நாம் ஒவ்வொருவரும் இந்த கோரோனோ பெரும்தொற்றிற்கு எதிரான போரில் கதாநாயகர்களாக ஜொலிக்கலாம்

No comments:

Post a Comment

Kalvi Tv – Kalvi Tholaikatchi Live – Videos

12 TH STANDARD KALVI TV VIDEOS VISIT THIS SITE 11 TH STANDARD KALVI TV VIDEOS VISIT THIS SITE ...

Post Top Ad

Your Ad Spot