சர்வபள்ளி
ராதாகிருஷ்ணன்
வாழ்கை
வரலாறு
·
சர்வபள்ளி
ராதாகிருஷ்ணன்
அவர்கள், சுதந்திர
இந்தியாவின்
முதல்
குடியரசுத்
துணைத்தலைவரும், இரண்டாவது
குடியரசுத்
தலைவரும்
ஆவார்
·
ஆசிரியராகத்
தன் பணியைத்
தொடங்கிய
டாக்டர்
ராதாகிருஷ்ணன்
அவர்களின்
பிறந்த நாளே
செப்டம்பர் 5-ம்
தேதி அன்று
ஆசிரியர்
தினமாக’
கொண்டாடப்படுகிறது.
பிறப்பு:
செப்டம்பர் 5, 1888
பிறப்பிடம்:
சர்வபள்ளி
கிராமம், திருத்தணி, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு:
ஏப்ரல் 17, 1975
தொழில்:
அரசியல்வாதி, தத்துவவாதி, பேராசிரியர்
பிறப்பு
சர்வபள்ளி
ராதாகிருஷ்ணன்
அவர்கள், 1888
செப்டம்பர் 5-ம்
தேதி
திருத்தணி
அருகே உள்ள
சர்வபள்ளி
என்ற
கிராமத்தில், ஏழை
தெலுங்கு
நியோகி என்ற
பிராமணப்பிரிவில்
சர்வபள்ளி
வீராசாமிக்கும், சீதம்மாக்கும்
மகனாகப்
பிறந்தார்.
கல்வி
ஆரம்பக்
கல்வியைத்
திருவள்ளூரிலுள்ள
‘கௌடி’
பள்ளியிலும்,
பின்னர்
திருப்பதியிலுள்ள
‘லூத்தரன்
மிஷன் உயர்
பள்ளியிலும்’ படித்தார்.
அவர்
வேலூரிலுள்ள
ஊரிஸ்
கல்லூரியில்
சேர்ந்த பின், சென்னையிலுள்ள
கிறிஸ்துவர்
கல்லூரிக்கு மாறினார்.
தத்துவத்தை
முதல் பாடமாக
தேர்ந்தெடுத்த
அவர், அதில்
இளங்கலை (பி.ஏ)
மற்றும்
முதுகலைப்
பட்டமும்
(எம்.ஏ)
பெற்றார்.
இல்லறம்
ராதாகிருஷ்ணன்
அவர்கள், தனது
தூரத்து
உறவினரான
சிவகாமு, என்பவரை
தனது
பதினாறாவது
வயதில்
மணமுடித்தார்.
இவர்களுக்கு
ஐந்து பெண்
குழந்தைகளும், சர்வபள்ளி
கோபால் என்ற
மகனும்
உள்ளனர்.
ஆசிரியர்
பணி
1.1909ல்
சென்னை
பிரசிடென்சி
கல்லூரியில்
உதவி விரிவுரையாளராக
பணியேற்றார்.
2.1918ல், மைசூர்
பல்கலைக்கழகத்தின்
தத்துவ
பேராசிரியராகத்
தேர்வு
செய்யப்பட்டார்,
3.1921ல், கல்கத்தா
பல்கலைக்கழகத்தில், தத்துவப்
பேராசிரியராகப்
பரிந்துரைக்கப்பட்டார்.
அரசியல்
1949 ஆம்
ஆண்டில்
சோவியத்
யூனியன்
தூதராக நியமிக்கப்பட்டார்.
1952ல், இந்தியாவின்
முதல் துணைத்
தலைவராக
ராதாகிருஷ்ணன்
அவர்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
No comments:
Post a Comment