சர்தார் வல்லபாய் படேல் வரலாறு
சுதந்திர இந்தியாவின் இரும்பு மனிதர்
என அழைக்க படும் சர்தார் வல்லபை படேல் ,இந்திய தேசிய
காங்கிரஸ் தலைவர்களுள் முக்கியமான இவர்
இந்திய சுததிர போராட்டத்தில் கலந்து கொண்டு போராடியவர் ,சுதந்திர
இந்தியாவின் துணை துணை பிரதமராக பதிவு
ஏற்ற இவர் ,ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட
சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார்
பெயர் :சர்தார் வல்லப்பாய் படேல்
பிறப்பு : 31.10.1875
ஊர் :கரம்சாத் (குஜராஜ்)
தந்தை : ஜாவர்பாய் படேல்
தாய் : லாட்பா
தொழில்: வழக்குரைஞர்
சாதனை :ஒருங்கிணைந்த பாரதம்
இளமை காலம்
படேல் பிறந்தது ஒரு விவசாய குடும்பம்
ஆகும் இவரது தந்தை சுவாமிநாராயணனின் சம்ப்ரதாயின் பக்தர் ஆகையால் ,20 கிலோ மீட்டர் கோவிலுக்கும் நடந்தே செல்லும் பழக்கம்
குடும்பத்தினருக்கு அமைந்தது இது படேல் அவர்களின்
உடலை கட்டுகோப்பாகவும் வலிமையாகவும் உருவாக்க உதவியது
படிப்பு
பள்ளி கல்வியில் சிறந்து விளங்கிய
படேல் ,சிறுவயது முதலாகவே வழக்கறிஞராகும் கனவுடன்
இருந்தார் ,தனது இருபத்திரண்டாவது வயதில் மெட்ரிக்
படிப்பை முடித்து கொண்டு இங்கிலாந்து சென்று வழக்குரைஞர் படிப்பு படித்தார்
வழக்குரைஞர்
வழக்குரைஞர் படிப்பை குதித்த படேல்
அகமதாபாத்தில் தனது வழக்குரைஞர் தொழிலை தொடங்கினார் ,உள்ளூர்
மக்களின் பிரச்சனைக்காக போராடிய படேல் மக்களின் செல்வாக்கை பெற்றார் ,1917-ம் ஆண்டு மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றார். சுதேசி இயக்கம்
உச்சத்தில் இருந்தபோது காந்திஜியின் உரையைக் கேட்டவர், வக்கீல்
தொழிலை உதறி சுதேசி இயக்கத்தில் இணைந்தார்.
சர்தார்’
குஜராத்தில் கேடா என்ற இடத்தில் பயங்கர
பஞ்சம் ஏற்பட்டு ஆங்கிலேய அரசிடம் வரி
விலக்கு கேட்டு விவசாயிகள் போரா டினர், காந்தி
மற்றும் படேல் தலைமையில் வரிகொடாமைப்
போராட்டம் நடைபெற்று வரிவிலக்கு கிடைக்க பெற்றது
படேலின் முதல் வெற்றி இது!
பார்டோலி என்ற இடத்தில் விவசாயிகள் நலன் காக்க
நடைபெற்ற மற்றொரு சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் படேலுக்கு வெற்றி கிடைத்தது.
அப்போதிருந்து மக்களால் ‘சர்தார்’ என்று அன்போடு அழைக்கப்பட்டார். அதன் பிறகு
போராட்டங்களும் சிறைவாசமும் அவருக்கு வாடிக்கையாகிப் போனது.
காந்தியுடன் நட்பு
வட்டமேஜை மாநாட்டு தோல்விக்குப் பிறகு
காந்தி, படேல் கைது செய்யப்பட்டனர். எரவாடா மத்திய
சிறையில் அடைக்கப்பட்டபோது இருவருக்கும் நெருக்கம் வளர்ந்தது.
அரசியல்
சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய் என்று
அழைக்கப்பட்டார். இந்திய விவசாயிகளின் ஆன்மாவாக கருதப்பட்டார். நவீன இந்தியாவை
உருவாக்கியவர்களில் முக்கியமானவர். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை
அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் பணியாற்றினார்.
அகண்ட பாரதம்
இந்திய விடுதலை பெட்ரா பின்பு சிற்றரசர்கள் கீழ் உடைபட்டு தனித்தனி இராஜ்ஜியங்களாக
இருந்தது. இப்படி ஒரு நிலையில் இரும்புக்
கரம் கொண்டு அனைத்து (565) சமஸ்தானங்களையும் ஒன்றிணைத்து புதிய
ஒருங்கிணைந்த பாரதத்தை வெகு விரைவில் உருவாக்கிக் காட்டினார் சர்தார் படேல்.
, அரச குடும்பங்கள் தங்கள் நாடுகள்
தங்களுக்கே வேண்டும் என்ற வேண்டுதல்களை நிராகரித்து ஐநூறுக்கும் மேற்பட்ட மாநிலம் சார்ந்த இந்தியாவை வி.பி.மேனனுடன்
இணைந்து இரும்பு மனிதராக நின்று அகண்ட பாரதத்தை உருவாக்கினர்
புதிய இந்தியாவின் சிற்பி
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்
போன்ற இந்திய அரசு ஊழியர்கள் அமைப்பினை உருவாக்கிட நிறைய உழைப்பை தந்தவர். மாநில
வாரியாக இந்தியாவை ஒன்றிணைத்த பிறகு அதிகாரத்தோடு மக்களை நல்வழிப்படுத்த, தவறுகள் நடக்காமல் இருக்க இது தேவை என்று கருதி உருவாக்கிட
நற்முயற்சி எடுத்தார் அவர்.
மறைவு
டிசம்பர் 15, 1950 இல் இயற்கை எய்தினார்
No comments:
Post a Comment